நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட்டில் சிகரெட்டுகளுக்கு விற்பனை வரி விதிக்கப்பட வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தல்

பினாங்கு:

2026 க்கான பட்ஜெட்டில்  சிகரெட்டுகளுக்கு அதிக விற்பனை வரியை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எதிர்பார்க்கின்றது.

பல ஆண்டுகளாக சிகரெட்டுகள் விற்பனை வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இதைச் செய்வதற்கான சரியான நேரம் இது என அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

புகைபிடிப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 500ரிங்கிட வரை சிகரெட் வாங்குவதற்கு செலவிடுகிறார்கள் என்றார் அவர்.

அரசாங்கம் தற்போதைய ஐந்து மில்லியன் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பினால், 2026 பட்ஜெட்டில் சிகரெட்டுகளுக்கு கட்டாய விற்பனை வரி விதிக்க வேண்டும்.

அதிக விலை புகையிலை பொருட்களை  நுகர்வைக் குறைக்கிறது. மேலும், தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் புகைபிடிப்பதை விட்டுவிட அல்லது குறைக்க ஊக்குவிக்கிறது.

அதிகரிக்கும் செலவுகளின் காரணமாக இளைஞர்கள் புகைபிடிப்பதைத் தொடங்குவதை கடினமாக்குகிறது. மேலும் புகையிலை பயன்பாட்டைத் தொடங்குவதையும் அதிகரிப்பதையும் கணிசமாகக் குறைக்கிறது என்றார் அவர்.

அதிக விலைகள் ஏற்கனவே உள்ள புகைப்பிடிப்பவர்களை புகைபிடிப்பதை விட்டுவிட ஊக்குவிக்கின்றன.

அதிகரித்த வரி வருவாயை புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைககுக்கும், பிற பொது சுகாதார திட்டங்களுக்கும்  பயன்படுத்தலாம் என்றும் சுப்பாராவ் தெரிவித்தார்.

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்  விலைகளை உயர்த்தும் கலால் வரிகளின் அதிகரிப்பு புகையிலை பயன்பாடு, பரவல், துவக்கம் மற்றும் குறைப்பதைக் காட்ட "போதுமான ஆதாரங்களைக்" கொண்டுள்ளது என்று முடிவு செய்துள்ளது.

அக்கறையுள்ள மடானி அரசாங்கத்தின் பிரதமர் 2026 பட்ஜெட்டில் சிகரெட் வரி குறித்த ஆரோக்கியமான செய்தியை அறிவிப்பார் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எதிர்பார்ப்பதாக சுப்பாராவ் தெரிவித்தார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset