நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் மேலும் 21 அணு உலைகள்

புது டெல்லி:

வரும் 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 அணு உலைகள் செயல்படும் என்றும் மேலும் 12 உலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 7 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.

இதுகுறித்து மாநிலங்களவையில்  மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 9 அணு உலைகள் இருக்கும். இதுதவிர, மேலும் 12 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

அந்த அணு உலைகள் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

India announces 'first if its kind' nuclear programme, to have 9 nuclear  reactors by 2024, India News News | wionews.com

முந்தைய காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற ஒரு சில மாநிலங்ககளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தமுறை வட மாநிலங்களில் அணு உலைகள் அமைப்பதற்கு கவனம் செலுத்தப்படும்.

தற்போதைய ஆட்சியில்தான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கான அனுமதி முதல்முறையாக அளிக்கப்பட்டது. அதுவும், ஒரே ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு சாதனையாகும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset