நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் வெள்ளப் பேரிடர் நிலைமையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆய்வு செய்தார்

கோத்தா கினபாலு:

சபாவில் வெள்ளப் பேரிடர் நிலைமையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆய்வு செய்தார்.

தொடர் கனமழையை தொடர்ந்து சபாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து மாநிலத்தைத் தாக்கி, 13 பேர் உயிரிழந்த நிலச்சரிவு உட்பட பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் நிலைமையை ஆய்வு செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சபாவிற்கு வந்தார்.

பிரதமரின் வருகையை முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர், மாநில, மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் வரவேற்றனர்.

பின்னர், தஞ்சோங் அரு சர்வதேச விமான நிலைய விளக்க அறையில், மாநில செயலாளர் டத்தோ சஃபர் உந்தோங், பேரிடர் நிலைமை குறித்து பிரதமருக்கு விளக்கினார்.

மேலும் பிரதம பெனாம்பாங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்வதார்.

அதே வேளையில் பெனாம்பாங்கில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண  மையத்தை  பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset