நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை: துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன

கோத்தாபாரு:

கம்போங் சுங்கை பாரு கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.

கோலாலம்பூர் துணை போலிஸ் தலைவர் டத்தோ முகமது உசுப் ஜான் முகமது இதனை கூறினார்.

கடந்த செப்டம்பர் 11 அன்று கோலாலம்பூரில் உள்ள கம்போங் சுங்கை பாருவில் 37 மாடி வீடுகளை வெளியேற்றும் நடவடிக்கையின் போது குழப்பம் ஏற்பட்டது.

இது தொடர்பான விசாரணை அறிக்கைகளை கோலாலம்பூர் போலிஸ் இன்று துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பியது.

கடந்த புதன்கிழமை நடந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை முன்னதாக தனது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர்.

ஆனால் அது பல கூடுதல் வழிமுறைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் புதிய விசாரணை ஆவணங்கள் இன்று மீண்டும் சமர்ப்பிக்கப்படும்.

இதுவரை எட்டு பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் தடுப்புக் காவல் காலம் முடிந்த பிறகு அனைவரும் போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset