நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டின் ஒவ்வொரு சென்னும் கசிவு இல்லாமல் பயன்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டின் ஒவ்வொரு சென்னும் கசிவு இல்லாமல் பயன்படுத்தப்படும்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம், மாற்றுதல், பராமரிப்புக்காக 30 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி எந்தவிதமான கசிவு அல்லது அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் அதன் அசல் நோக்கத்திற்காக முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு உண்மையான தேவையும் வெளிப்படையான உள்ளடக்கிய முறையில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்யப்படும்.

அதற்கு பள்ளி வாரியக் குழு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பள்ளியின் முதல்வர்களுடனும் ஒரு பங்கேற்பு அணுகுமுறை எடுக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டின் ஒவ்வொரு சதவீதமும் அதன் அசல் நோக்கத்தை எந்தவிதமான கசிவு, அதிகார துஷ்பிரயோகம் அல்லது தேவையற்ற அதிகாரத்துவம் காரணமாக தாமதங்கள் இல்லாமல் அடைவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.

இன்று துணை கல்வியமைச்சர் வோங் கா வோவுடன் மேலாண்மை ஈடுபாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் ஒரு முகநூல் பதிவில் இதனை கூறினார்.

சுங்கை பூலோவின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ ரமணன், 

முன்னதாக ஆகஸ்ட் 29, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நடந்த இரண்டு முந்தைய அமர்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் இருந்ததாகக் கூறினார்.

பேரா கிளேபாங், சிலாங்கூர்  நோர்த் ஹம்மாக் தோட்டம், ஜொகூர் கூலாய் தோட்டம்,  ரினி தோட்டம் ஆகிய தமிழ்ப்பள்ளிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset