நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

மொத்தமாக 112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இதனை கூறினார்.

பிரதமர் வேட்பாளர் பதவிக்கான அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் வேடிக்கையாக உள்ளது.

சம்பந்தப்பட்ட கட்சியால் நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வெற்றியைப் பெற முடியாவிட்டால் அந்த போட்டி பயனற்றது.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு ஏன் இவ்வளவு பேர் போட்டியிடுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

ஒரு வேட்பாளர் தனது கட்சி 112 இடங்களை வெல்லவில்லை என்றால் அவர் பிரதமராக முடியாது.

இரண்டு முறை முன்னாள் பிரதமராக இருந்த அவர் இன்று ஓர்  அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

வெற்றி பெற, ஒரு கட்சி 112க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்துவது மட்டுமல்லாமல், 

மற்ற கட்சிகளின் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஒரு கட்சி 112 இடங்களை வெல்வது சாத்தியமற்றது என்றால் பிரதமர் வேட்பாளர் பிரதமராவது சாத்தியமற்றது. 

பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset