நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம் அல்லாத கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா-

முஸ்லிம் அல்லாத அரசியல் கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனிப்பட்ட நலன்களைப் பெற முயற்சிக்கும் சில கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளால் பாஸ் கட்சி எளிதில் குழப்பமடைய வேண்டாம்.

கட்சி விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதன் மூலம் ஹீரோக்களாக இருக்க விரும்பும் கட்சிகள் அல்லது தலைவர்களால் கட்சி பெரும்பாலும் குழப்பமடைகிறது.

இதில் பாஸ் ஒரு தெளிவான திசையைக் கொண்டிருக்க வேண்டும்.

எந்த முஸ்லிம் அல்லாத கட்சியுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கருதப்படும் பாஸின் நிலைப்பாட்டை அவர் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

ஒரு கட்சி தோல்வியுற்றால், அவர்கள் மூலதனத்தைக் கண்டுபிடிக்க மற்ற கட்சிகளிடம் இணைகிறார்கள்.

பாஸ் அத்தகைய தலைவர்களுக்கு பலியாகக்கூடாது. ஏனெனில் இறுதியில் தோல்வியடைவது அதன் சொந்த உறுப்பினர்களே.

ஒரு வீடு இடிந்து விழும் வரை அதை அழிக்கக்கூடிய கறையான்களுடன் நான் அவர்களை  ஒப்பிடுகிறேன்.

இன்று நடைபெற்ற Jom@Coop நிகழ்ச்சிக்குப் பிறகு கெஅடிலான் உதவித்  தலைவருமான டத்தோஸ்ரீ  ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset