நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி

கோலாலம்பூர்:

பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே முக்கிய காரணம்.

டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் முன்னாள் அதிகாரி மார்சுக்கி முகமது கூறினார் 

பாஸ் உதவித் தலைவர் முகம்மது சனுசி முகம்மது நோரின் அறிக்கையை மார்சுக்கி கடுமையாக விமர்சித்தார்.

பாஸ் தேர்தல் இயக்குநரான சனுசி, தேர்தலில் போட்டியிடுவதற்கு தேசியக் கூட்டணியின் உறுப்பு கட்சிகளின் தேர்தல் கேந்திரத்தையும் அதன் நிதியையும் அதிகம் சார்ந்திருப்பதாகக் கருதப்படுவதாகக் கண்டித்ததைத் தொடர்ந்து அவர் சாடினார்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலின் அனைத்து செலவையும் பெர்சத்து ஏற்றுக் கொண்டது.

இது பாஸ் கட்சிக்கு 43 நாடாளுமன்ற இடங்களை வெல்ல வாய்ப்பளித்தது.

மேலும் இது அக்கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இதை அக்கட்சி மறந்து விடக் கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset