செய்திகள் தமிழ் தொடர்புகள்
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
சென்னை:
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினால் அங்கு சுற்றுலாவுக்காகவும் இதர காரணங்களுக்காகவும் சென்று வெளியேற இயலாமல் சிக்கித் தவித்துவரும் தமிழர்களை மீட்டுவர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுடெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுடெல்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர். மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 011-24193300, கைபேசி எண்: 9289516712 (whatsApp), மின்அஞ்சல்:
http://tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
