செய்திகள் தமிழ் தொடர்புகள்
அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது; கட்சியில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸின் அதிரடி
திண்டிவனம்:
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காத நிலையில் அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என தெரிவித்துள்ள ராமதாஸ், அன்புமணி உடன் உள்ளவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்க தயார் எனவும் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ``கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.
பாமக தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி. பாமகவைச் சேர்ந்த யாரும் அன்புமணியுடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தொடர்ந்து, ``நான் வளர்த்த பிள்ளைகள்தான் அன்புமணியுடன் இருக்கிறார்கள். அவர்கள் தனிக்கட்சியாக செயல்படுவதுபோல் உள்ளனர். அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னித்து விடுகிறேன்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தை சொல்லைக்கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை வழங்கினார்கள். பழ. கருப்பையா கூட அறிவுரை வழங்கி இருக்கிறார். ஆனால் அதை அன்புமணி எதையும் மதிக்கவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம்.
அன்புமணியால் கட்சி அழிகிறது
46 ஆண்டுகாலம் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கிலே தண்ணீர், உணவின்றி நடந்து 96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். 2002-லிருந்து கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து வருகிறேன். ஆனால் அதற்கு அன்புமணி ஆதரவு தெரிவிக்கவில்லை.
அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது. அரும்பாடு பட்டு வளர்த்த பாமக என்ற கட்சி அன்புமணியால் அழிகிறது. பாமகவுக்கு இது பின்னடைவு கிடையாது. களையை மட்டுமே நீக்கி உள்ளோம். பாமகவை உரிமை கோர அன்புமணிக்கு உரிமையில்லை" என்று பேசியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
