நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு

சென்னை: 

தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் விஜய், செப்​.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு தவெக தலை​வர் விஜய், செப்​. 13-ம் தேதி முதல் கட்ட சுற்​றுப்​பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்​கு​கிறார்.

இதற்​கான அனு​மதி கோரி திருச்சி காவல் ஆணை​யரிடம் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் விண்​ணப்​பித்​திருந்​தார். ஆனால் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்​துக்கு அனு​மதி கோரி டிஜிபி அலு​வல​கத்​தில், ஆனந்த் நேற்று மனு அளித்​தார்.

அந்த மனு​வில் இடம் பெற்றுள்ள சுற்​றுப்​பயண விவரம்: செப்​.13-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை தவெக தலை​வர் விஜய் சுற்​றுப்​பயணத்தை மேற்​கொள்​கிறார். மொத்த சுற்​றுப்​பயண​மும் சனி, ஞாயிற்​றுக்​கிழமை​களில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. செப்​.13-ம் தேதி திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர் மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணத்தை விஜய் தொடங்​கு​கிறார்.

செப்​.20-ம் தேதி நாகை, திரு​வாரூர், மயி​லாடு​துறை, அக்​. 4, 5 கோவை, நீல​கிரி, திருப்​பூர், ஈரோடு, அக்​.11 கன்​னி​யாகுமரி, நெல்​லை, தூத்​துக்​குடி, காஞ்​சிபுரம், வேலூர், ராணிப்​பேட்​டை, அக்​.25 தென் சென்​னை, செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் செய்கிறார்.

மேலும், நவ.1 கிருஷ்ணகிரி, தரு​மபுரி, திருப்​பத்​தூர், நவ.8 திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், நவ.15 தென்​காசி, விருதுநகர், நவ.22 கடலூர், நவ.29 சிவகங்​கை, ராம​நாத​புரம், டிச.6 தஞ்​சாவூர், புதுக்​கோட்​டை, டிச.13 சேலம், நாமக்​கல், கரூர் மாவட்​டங்​களி​லும் பயணத்​தைத் தொடர்​கிறார். டிச.20-ல் திண்​டுக்​கல், தேனி, மதுரை மாவட்​டங்​களில் நிறைவு செய்​கிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset