நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம் 

கன்னியாகுமரி: 

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கண்ணாடி இழைப் பாலத்தின் ஓரிடத்தில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு அருகே நின்று செஃபி எடுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் அங்கே அட்டைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறது. பலரும் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள்.

கன்னியாகுமரி கடலில், விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலைக்கு இடையே சுற்றுலாப் பயணிகள் சென்று வர படகுப் போக்குவரத்து இருந்து வந்தது. ஆனால், கடல் அலையின் சீற்றம் அதிகமாகக் காணப்படும் போது படகுப் போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் வெகு தொலைவிலிருந்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையைப் போக்க, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம், 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது.

வார இறுதி நாள்களில் இங்கு நுழைவுச் சீட்டு எடுக்க நீண்ட வரிசைகள் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset