
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரை - சென்னை; விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு வேண்டும்: சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோரிக்கை
சென்னை:
சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்ய செல்பவர்களுக்கு பெரிய அளவிலான மன உளைச்சல் சமீப காலமாக ஏற்படுகிறது. அதற்கான காரணத்தை ஒவ்வொரு பயணியும் அறிந்தே உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மதுரைக்கு செல்லும் ஏடிஆர் விமானங்களுக்கு செல்ல, நெடுந்தூரம் பல கி.மீ தொலைவு பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது.
விமானத்தில் ஆகாய வழி மதுரைக்கு பயணமாகும் நேரம், பேருந்தில் பயணிக்க ஆகிறதே என்கிற சலிப்பு, ஒவ்வொரு பயணிக்கும் ஏற்படுகிறது. இப்பேருந்துகளில் இருக்கைகள் குறைவாகவே உள்ளதால், வயது மூத்தோரும் குழந்தைகளும் கூட நின்று கொண்டே பயணிக்க வேண்டிய சங்கடமும் உள்ளது.
சென்னை விமான நிலையத்தின் 1,301 ஏக்கர் நிலப்பரப்பின் சுற் றுச்சுவர் ஒட்டியுள்ள ஒட்டு மொத்த பாதையையும் கடந்து கடைக் கோடியில், இந்த விமானங்கள் நிறுத்தப்படுவதற்கான காரணம் பார்க்கிங் கட்டணம் குறைவு என்ப தாக சொல்லப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதும், கட்டணம் கட்டுக்குள் இல்லாதிருப்பது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய ஊர்க ளுக்கு செல்ல ஏடிஆர் விமானங்களே இயக்கப் படுகின்றன. அதிக அளவில் மக்கள் பயணிக்கும் இந்த வழித்தடங்களில் ஏர் பஸ் விடுவதே சரியாக இருக்கும். எனவே மேற்கண்ட இப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
September 8, 2025, 6:16 pm
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்
September 8, 2025, 6:06 pm