நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருச்சியில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் விஜய்

திருச்சி: 

தவெக தலை​வர் விஜய் வரும் 13-ம் தேதி திருச்​சி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் அவர் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ள​தாக​வும், ஓரிரு நாளில் தேர்​தல் பிரச்​சார சுற்​றுப்​பயணம் இறுதி செய்​யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும் என்​றும் கட்சி நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். 

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 8 மாதங்​கள் உள்ள நிலை​யில், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தற்​போதே தீவிர பிரச்​சார சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

தமிழக வெற்​றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்​கி​யுள்ள நடிகர் விஜய், விக்​கி​ரவாண்​டி, மதுரை​யில் பிரம்​மாண்ட மாநாடு​களை​யும், கோவை​யில் பூத் கமிட்டி கூட்​டத்​தை​யும் நடத்​தி​னார். அவற்​றில் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​களைத் திரட்டி தனது பலத்தை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

தொடர்ந்​து, திமுக, அதி​முக போன்ற திரா​விட கட்​சிகளுக்கு திருப்​பு​முனை ஏற்​படுத்​தும் என சென்​டிமென்ட்​டாக கருதப்​படும் திருச்​சி​யில் வரும் 13-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்தை விஜய் தொடங்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இதுகுறித்து தவெக மாநில நிர்​வாகி​கள் சிலர் கூறிய​தாவது: 

திருச்​சி​யில் வரும் 13-ஆம் தேதி தொடங்​கும் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக, நவீன பிரச்​சா​ரப் பேருந்து தயார் நிலை​யில் உள்​ளது. திருச்சி மாவட்​டத்​தில் 13, 14-ஆம் தேதி​களில் விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வார் என எதிர்​பார்க்கிறோம். பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளும் இடங்​களில், அந்​தந்​தப் பகு​தி​களில் உள்ள பிரபலங்​கள், தொழில​திபர்​கள் உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேச உள்​ளார். மாற்​றுக் கட்​சி​யினர் தவெக​வில் இணை​யும் நிகழ்​வு​களும் நடை​பெற உள்​ளன.

தேர்​தல் பிரச்​சா​ரத்தை திருச்சியில் தொடங்​கு​வது மட்​டுமே தற்​போது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்​சியை தொடர்ந்து கரூர், ஈரோடு மாவட்​டங்​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதா அல்​லது டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சை, திரு​வாரூர், நாகை, மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதா என்​பது குறித்த ஆலோ​சனை தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

இரண்​டொரு நாளில் தேர்​தல் பிரச்​சார சுற்​றுப்​பயணம் இறு​தி செய்​யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும். திருச்​சி​யில் தொடங்​கும் தேர்​தல் பிரச்​சா​ரப் பயணம் தவெக​வுக்கு திருப்​பு​முனையை ஏற்​படுத்​தும் என நம்​பு​கிறோம்.இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset