செய்திகள் தமிழ் தொடர்புகள்
மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
சென்னை:
மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 4-ம் தேதி (இன்று) சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்.6,7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்.4,5 தேதிகளில் 1,115 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து 130 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றவர்கள் சென்னை திரும்ப செப்.7-ம் தேதி 875 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்களில் மொத்தம் 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார இறுதியில் பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 11:18 am
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
June 23, 2026, 10:20 pm
நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-இல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 23, 2026, 1:23 pm
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
June 22, 2026, 11:09 am
முதல் அமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
June 18, 2026, 4:15 pm
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
June 18, 2026, 10:39 am
இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை தொடருமா?
June 17, 2026, 12:37 pm
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்
June 16, 2026, 5:54 pm
