நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை; பீதி கொள்ள வேண்டாம்: சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை:

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண Influenza A காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு Influenza A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருவோருக்கு சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பலர் தொடர்ந்து உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதை கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த பீதிக்கு காரணம் உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா வைரஸ் தாக்கியதே என கருதப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset