நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக பூப்பந்து போட்டியின் வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

சிப்பாங்:

உலக பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு  உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

உலக பூப்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற்றது.

இப்போட்டியில் உலக சாம்பியன்களா மாறி வரலாறு படைத்த தேசிய கலப்பு இரட்டையர் அணியான சென் டாங் ஜீ-டோ ஈ வெய், இன்று அதிகாலை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வந்தடைந்தபோது அவர்களுக்கு உற்சாக  வரவேற்பு வழங்கப்பட்டது 

அவர்கள் பயணம் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 21 இன்று அதிகாலை 5.51 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.

உலகின் நான்காவது இடத்தில் உள்ள ஜோடி தங்கள் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தபடி மகிழ்ச்சியான முகங்களுடன் வந்தனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில வெள்ளிப்பதக்கம் வென்ற பியெர்லி தான் - எம். தீனா ஜோடியும் உடன் வந்தனர்.

பலத்த கரவோஷங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் அவர்களை வரவேற்றனர்.

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா  இயோ, தலைமை செயலாளர் டத்தோ நகுலேந்திரன், தேசிய விளையாட்டு மன்றத்தின் இயக்குநர் ஜெப்ரி, மலேசிய பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் உட்பட பலர் அவர்களை வரவேற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset