நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புதிய எதிர்காலத்தை தேடி அஸ்டன் வில்லாவில் ஜேடன் சான்கோ இணைந்தார்

லண்டன்:

மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து சீசன் கால கடன் அடிப்படையில் ஜேடன் சான்கோ அஸ்டன் வில்லாவில் இணைந்துள்ளார்.

இதன் மூலம் புதிய கிளப்பைக் கண்டுபிடிப்பதற்கான அவரது நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கடந்த சீசனில் செல்சியுடனான கடன் காலம் முடிந்த பிறகு 25 வயதான அவர் இப்போது உனேய் எமெரியின் அணியில் உள்ளார்.

குறிப்பாக அங்கு அவர் ரியல் பெட்டிஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கோல் அடித்து செல்சி அணியினர்  ஐரோப்பா லீக்கை வெல்ல உதவினார்.

இந்நிலையில் மென்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து ஜேடன் சான்கோவை ஒப்பந்தம் செய்ததை அறிவிப்பதில் அஸ்டன் வில்லா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.

சான்கோ தனது இளமைப் பருவத்திலிருந்தே மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடி வருகிறார்.

குறிப்பாக பன்டேஸ் லீகாவில் புரோசியா டோர்ட்மண்ட் அணிக்காக அவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset