
செய்திகள் விளையாட்டு
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்குள் நுழைந்தனர்
நியூயார்க்:
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் ஜன்னிக் சின்னர், அலெக்ஸ் டி மினார், லோரென்சோ முசெட்டி உள்ளிட்டோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் ஜன்னிக் சின்னர், 10-ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை எதிர்கொள்கிறார். லோரென்சோ முசெட்டி 4-வது சுற்றில் 6-3, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் 44-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ஜேமி முனாரை தோற்கடித்தார்.
8-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் 435-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் லியாண்ட்ரோ ரீடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.
கால் இறுதி சுற்றில் அலெக்ஸ் டி மினார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
25-ஆம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 4-ஆவது சுற்றில் 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்றில் 3-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 23-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகவுடன் மோதினார். இதில் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கோ கோ காஃபை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.
கால் இறுதி சுற்றில் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதுகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 12:19 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: அர்ஜெண்டினா அபாரம்
September 5, 2025, 12:18 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா வெற்றி
September 5, 2025, 9:56 am
லிவர்பூல் அணியின் வெற்றிப் பேரணி மீது காரை மோதிய 134 பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்க மறுப்பு
September 4, 2025, 8:38 am
பெண் நடுவரை அறைந்த கொலம்பிய கிளப் வீரர்
September 4, 2025, 8:35 am
லியோனல் மெஸ்ஸிக்கான கடைசி தகுதிச் சுற்று ஆட்டம்
September 3, 2025, 8:40 am
உலகக் கிண்ணத்தை வென்ற ஜெராட் பிக் சுல்தான் இப்ராஹிம் அரங்கிற்கு வருகை தந்தார்
September 3, 2025, 8:37 am
புதிய எதிர்காலத்தை தேடி அஸ்டன் வில்லாவில் ஜேடன் சான்கோ இணைந்தார்
September 3, 2025, 7:23 am
பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி
September 2, 2025, 5:21 pm