நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரவு நேர கேளிக்கை மையங்களுக்கான தடையை நீட்டித்தது  தாய்லாந்து அரசு 

பேங்காக்:

இரவு நேரக் கேளிக்கை விடுதிகளுக்கான தடையை ஜனவரி நடுப்பகுதிவரை நீட்டித்துள்ளதாக  தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதமே கேளிக்கைக் கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கேளிக்கை சங்கத்தினர் வலியுறுத்தப்படும் வேளையில் அந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கிருமிப்பரவல் சூழலில் இரவுக் கேளிக்கைக் கூடங்களை முன்கூட்டியே திறக்க அனுமதிப்பது அபாயமிக்கது என்று தாய்லாந்து அரசாங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Bangla Road, Patong | DestiMap | Destinations On Map

அந்தத் துறையின் தயார்நிலையைப் பொறுத்து இரவுக் கேளிக்கைக் கூடங்களைத் திறக்க முன்கூட்டியே அனுமதிப்பது பற்றிப் பரிசீலிக்கப்படலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்குப் புத்துயிரூட்ட, வெளிநாட்டுப் பயணிகளைத் தாய்லாந்து அனுமதிக்க ஆரம்பித்துள்ளது.

என்றாலும் நெருக்கடிகால உத்தரவை மேலும் இரண்டு மாதத்துக்கு நீட்டித்துள்ளது தாய்லாந்து அரசாங்கம்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset