நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைமைத்துவத்திடம் விட்டு விடுகிறோம்: டத்தோ ராஜா சைமன்

கோலாலம்பூர்:

மஇகாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைமைத்துவத்திடம் விட்டு விடுகிறோம்.

கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் இதனை கூறினார். 

கூட்டரசுப் பிரதேச மஇகா மாநாடு இன்று கம்போங் பண்டான் டிராகான் உணவக மண்டபத்தில் நடைபெற்றது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை கூட்டரசு பிரதேச மஇகாவும் நிறைவேற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை பல மாநிலங்கள் எடுத்து வரும் நிலையில் கூட்டரசுப் பிரதேச மஇகாவும் முடிவு எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மாநாட்டில் நான்கு தீர்மானங்களில் முக்கிய தீர்மானமாக இது அமைந்துள்ளது.

இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் மஇகாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதிகாரத்தை மஇகா தலைமைத்துவத்திடம் விட்டு விடுகிறோம்.

இவ்விவகாரத்தில் கட்சி தலைமைத்துவத்திற்கே அனைத்து அதிகாரமும் உண்டு என்று டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

முன்னதாக மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ அஜோசன், டத்தோ முருகையா,  டத்தோ நெல்சன், செயலாளர் டத்தோ ஆனந்தன், பொருளாளர் டத்தோசிவக்குமார், இளைஞர் அணி தலைவர் அர்விந்த், மகளிர் அணி தலைவி சரஸ்வதி நல்லதம்பி உட்பட பலரும் இந்த மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset