
செய்திகள் மலேசியா
அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை சமாளிக்க பிரிவ்-ஐ நிதி அதிகரிக்கப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை சமாளிக்க பிரிவ்-ஐ நிதி அதிகரிக்கப்பட வேண்டும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
பேங்க் ரக்யாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட பிரிவ்-ஐ நிதியுதவித் திட்டம், கிடைக்கக்கூடிய நிதியை விட அசாதாரணமான தேவையைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி பயன்படுத்தப்பட்டதிலிருந்து இதைக் காணலாம்.
மேலும் விண்ணப்ப அம்சங்களை நாங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
அந்த நிதி உண்மையில் அதிகரிக்கப்பட வேண்டும்.
பேங்க் ரக்யாட்டின் தலைவரின் இந்த அன்பான உதவியை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிதியுதவி பெறத் தகுதியுள்ளவர்களுக்கான மொத்த ஒப்புதல்களின் எண்ணிக்கையைப் அதிகரித்துள்ளது.
இதனால் இப்போதைக்கு நிதி முழுமையாக தீர்ந்துவிட்டது.
பேங்க் ரக்யாட்டில இன்று நடைபெற்ற பிரிவ்-ஐ பிராந்திய மண்டல அளவிலான விளக்கக் கூட்டத்திற்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு பிரிவ்-ஐ திட்டத்தில் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 562 பேர் பயனடைய உதவியுள்ளது.
இதில் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர் 90 பேரும் அடங்கும்.
இதற்கிடையில் இன்று வரை, 11,300க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு நிதி, மானியத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2025, 6:57 pm
மஇகா சமுதாய மக்களுக்காக உண்மையிலேயே போராடும் ஒரு கட்சி: டத்தோஸ்ரீ சரவணன்
August 23, 2025, 4:55 pm
பந்திங் தொகுதியிலுள்ள பள்ளிகளுக்கு தேசியக் கொடி: பாப்பாராய்டு வழங்கினார்
August 23, 2025, 4:08 pm
பங்சார் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் தேசிய தின கொண்டாட்டம்
August 23, 2025, 1:31 pm
தேசிய அளவிலான செந்தமிழ் விழா சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்த வெற்றியாளர்
August 23, 2025, 12:03 pm