நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ குமாரின் நியமனத்தை இனப் பிரச்சினையாக்கக் கூடாது: மஹிமா கண்டனம்

கோலாலம்பூர்:

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமாரை நியமினத்தை இனப் பிரச்சினையாக்கக் கூடாது.

மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலய, சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கண்டித்தார்.

போலிஸ் துறையில் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் இனத்தின் அடிப்படையில் அல்ல.

மாறாக தகுதியின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கை நடந்திருக்கக்கூடாது.

மலாய்க்காரர்களைத் தவிர வேறு இனங்களை உள்ளடக்கிய நியமனம் இருக்கும் ஒவ்வொரு முறையும், இனப் பிரச்சினைகளைத் தூண்ட முயற்சிக்கும் கட்சிகள் நிச்சயமாக இருக்கும். 

மேலும் இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் என்ன நன்மை? நிறத்தின் அடிப்படையில் அல்ல, தகுதிகள், திறன்களின் அடிப்படையில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.

மலேசிய மலேசியா என்ற கருத்தை ஏற்க நாடு தொடங்கிவிட்டது என்று கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் குமாரை இழிவாக வாழ்த்தியது கண்டனத்துக்குரியது என்று டத்தோ  சிவக்குமார் சாடினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset