நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நானும் டத்தோஸ்ரீ சரவணனும் இருக்கிறோமோ இல்லையோ மஇகா தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

நானும் டத்தோஸ்ரீ சரவணனும்  இருக்கிறோமோ  இல்லையோ, மஇகா தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

கம்போங் பண்டான் டிராகான் உணவக மண்டபத்தில் கூட்டரசுப் பிரதேச மஇகா மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய அவர், மஇகா கிளைத் தலைவர்களுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

நாட்டில் உள்ள மஇகா கிளைகளை மூடுவது எங்கள் நோக்கம் அல்ல. கிளைகளை சீர்ப்படுத்துவதே நோக்கம்.

இந்த நாட்டில் மஇகா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சீர்த்திருத்தம் செய்து வருகிறோம்.

நான் இருக்கிறேனோ இல்லையோ, டத்தோஸ்ரீ சரவணன் இருக்கிறாரோ இல்லையா.

ஆனால் மஇகா தொடர்ந்து இருக்க வேண்டும்.

குறிப்பாக உண்யையான உறுப்பினர்கள் இருக்கக்கூடிய கட்சியாக மஇகா இருக்க வேண்டும்.

மூத்த உறுப்பினர்களை நாங்கள் போக சொல்லவில்லை.

மூத்த தலைவர்கள் இளையோருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கிறோம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset