நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மூன்றாவது முறை சிறந்த விளையாட்டாளருக்கான விருதை வென்ற சாலா

லண்டன்:

லிவர்ப்பூலின் ஆட்டக்காரர் முஹம்மது சாலாஹ் (Mohamed Salah) மூன்றாவது முறையாகச் சிறந்த விளையாட்டாளருக்கான விருதை வென்றுள்ளார்.

நிபுணத்துவக் காற்பந்துச் சங்கம் (Professional Footballers' Association) நேற்று (19 ஆகஸ்ட்) அவருக்கு அந்த விருதை வழங்கியது.

அந்த விருதை மூன்று முறை தட்டிச்சென்ற பெருமை சாலாவைச் சேரும்.

இதற்கு முன்னர் 2018இலும் 2022இலும் அவர் அந்த விருதை வென்றிருந்தார்.

சாலா 2017ஆம் ஆண்டு லிவர்ப்பூல் காற்பந்து அணியில் சேர்ந்தார். சென்ற காற்பந்துத் தொடரில் பிரிமியர் லீக்கில் ஆக அதிகமான கோல்களை அடித்த விளையாட்டாளர் சாலா. லிவர்ப்பூல் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல அவர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset