
செய்திகள் விளையாட்டு
படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி: தேம்பி தேம்பி அழுத நெய்மர்
சாண்டோஸ்:
பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் சாண்டோஸ் அணிக்காக நெய்மர் விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாஸ்கோ டா காமா, சாண்டோஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் சாண்டோஸ் 0-6 என்ற கணக்கில் வாஸ்கோ டா காமாவிடம் தோல்வியடைந்தது. இது நெய்மரின் தொழில்முறை வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாகும்.
சமீபத்தில் காயம் காரணமாக பார்மை இழந்து தவித்துவரும் நெய்மர், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் சாண்டோஸ் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வியடைந்தது. எதிர்ப்பார்ப்புடன் மைதானத்திற்கு வந்த பல ரசிகர்கள் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் படுதோல்வியடைந்ததால் மைதானத்திலேயே அமர்ந்து நெய்மர் கதறி அழுதார். அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதனம் செய்தபோதும் அழுதபடியே வெளியேறினார். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இத்தொடர் முழுக்க மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாண்டோஸ் அணி 19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15-வது இடத்தில் நீடிக்கிறது. இந்த சூழலில் அணியின் தோல்விக்காக சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 1:03 pm
மூன்றாவது முறை சிறந்த விளையாட்டாளருக்கான விருதை வென்ற சாலா
August 18, 2025, 9:06 pm
தாய்லாந்து சீ போட்டியில் கபடிக்கு முதல் முறையாக வாய்ப்பு: மேலும் இரண்டு பிரிவுகள் அறிமுகம்
August 18, 2025, 4:55 pm
மேஜர் லீக் கால்பந்து போட்டி: 19ஆவது கோலடித்து மெஸ்ஸி அபாரம்
August 17, 2025, 4:36 pm
மேக்ஸ்வெல் விளாசல்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி
August 15, 2025, 10:31 am
ஜேடன் சான்கோவை வாங்க ஏஎஸ் ரோமா முயற்சி
August 15, 2025, 10:30 am
ரியல்மாட்ரிட்டின் புதிய ஒப்பந்தம்; மெஸ்ஸி உலகின் சிறந்த வீரர்: மஸ்டாண்டுவோனோ
August 14, 2025, 10:38 am
தந்தை மெஸ்ஸியின் கோல் பாணியை பின்பற்றும் அவரது மகன்
August 14, 2025, 10:26 am
ஐரோப்பா சூப்பர் கிண்ணம்: பிஎஸ்ஜி சாம்பியன்
August 13, 2025, 10:03 am