
செய்திகள் விளையாட்டு
தாய்லாந்து சீ போட்டியில் கபடிக்கு முதல் முறையாக வாய்ப்பு: மேலும் இரண்டு பிரிவுகள் அறிமுகம்
கோலாலம்பூர்:
வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டு போட்டியில் முதல் முறையாக கபடி இடம் பெறுகிறது.
மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் பீட்டர் என்ற பத்மநாதன் தெரிவித்தார்.
சீ விளையாட்டு போட்டியில் கபடிக்கு அங்கீகாரம் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2002 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஆசிய போட்டியில் கபடி இடம் பெற்றது.
அதன் பின்னர் 2008 திரெங்கானு சுக்மா போட்டியில் முதல் முறையாக கபடி இடம் பெற்றது.
2010 மலாக்கா சுக்மா, 2011,2013 கோலாலம்பூர் சுக்மா போட்டியிலும் கபடி இடம் பெற்றது.
அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து 2022 கோலாலம்பூர் சுக்மாவில் கபடி கண்காட்சி போட்டியாக இடம் பெற்றது.
2024 சரவாக் சுக்மா போட்டியிலும் சுக்மா இடம் பெற்றது.
2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலும் கபடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இந்நிலையில் 2025 தாய்லாந்து சீ போட்டியில் கபடி முதல் முறையாக இடம் பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும் என்று பீட்டர் தெரிவித்தார்.
தாய்லாந்து சீ போட்டியில் கபடி பிரிவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் தீமோர் லெஸ்தே பங்கேற்கிறது.
தாய்லாந்து சீ போட்டிக்கு தயாராகும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை பினாங்கு USM அரங்கில் Pre- Sea Games போட்டி எனப்படும் முன்னேற்ற போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் மூன்று பிரிவுகளில் கபடி இடம் பெறுகிறது.
7 விளையாட்டாளர் மற்றும் 5 ரிசர்வ் விளையாட்டாளர்கள் ஸ்டெர்ட் கபடி போட்டி வழக்கம் போல் இடம் பெறும்.
ஐந்து விளையாட்டாளர்கள் இடம் பெறும் சூப்பர் 5 கபடி போட்டி மற்றும் மூன்று விளையாட்டாளர்கள் பங்கேற்கும் 3 ஸ்டார் போட்டி முதல் முறையாக அறிமுகப்படுத்தப் படுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று மலேசிய ஒலிம்பிக் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் மலேசிய கபடி சங்கத்தின் செயலாளர் அருள் பிரகாஷ் பலராமன், பொருளாளர் சுகுமாறன் ஆறுமுகம், உதவித் தலைவர் செல்வம் இராமசாமி, உச்சமன்ற உறுப்பினர் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-:பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 1:03 pm
மூன்றாவது முறை சிறந்த விளையாட்டாளருக்கான விருதை வென்ற சாலா
August 19, 2025, 12:30 pm
படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி: தேம்பி தேம்பி அழுத நெய்மர்
August 18, 2025, 4:55 pm
மேஜர் லீக் கால்பந்து போட்டி: 19ஆவது கோலடித்து மெஸ்ஸி அபாரம்
August 17, 2025, 4:36 pm
மேக்ஸ்வெல் விளாசல்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி
August 15, 2025, 10:31 am
ஜேடன் சான்கோவை வாங்க ஏஎஸ் ரோமா முயற்சி
August 15, 2025, 10:30 am
ரியல்மாட்ரிட்டின் புதிய ஒப்பந்தம்; மெஸ்ஸி உலகின் சிறந்த வீரர்: மஸ்டாண்டுவோனோ
August 14, 2025, 10:38 am
தந்தை மெஸ்ஸியின் கோல் பாணியை பின்பற்றும் அவரது மகன்
August 14, 2025, 10:26 am
ஐரோப்பா சூப்பர் கிண்ணம்: பிஎஸ்ஜி சாம்பியன்
August 13, 2025, 10:03 am