நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 சுக்மாவில் கபடியை பிரகாசிக்கச் செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: பீட்டர்

கோலாலம்பூர்:

2026 சுக்மாவில் கபடியை பிரகாசிக்கச் செய்ய  நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் பீட்டர் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டுப் போட்டி சிலாங்கூரில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் மொத்தம் 34 விளையாட்டுகள் இடம் பெறவுள்ளன.

குறிப்பாக கபடி போட்டி இந்த சுக்மாவில் தேர்வு போட்டியாக இணைக்கப்பட்டுள்ளது.

இது மலேசிய கபடி சங்கம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

சுக்மாவில் கபடியைச் சேர்ப்பதற்கு ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்த அனைத்து மாநில விளையாட்டு கவுன்சில்கள், மாநில கபடி சங்கங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஒற்றுமை, அர்ப்பணிப்பு இந்த மைல்கல்லை சாத்தியமாக்கியுள்ளது.

மேலும் சுக்மாவில் கபடியை இணைத்து கொள்ளும் முடிவை எடுத்த இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ,  தேசிய விளையாட்டு மன்றம், சுக்மா உச்சமன்ற குழு என அனைவருக்கும் நன்றி.

சுக்மாவில் கபடி இடம் பெறுவது இந்த விளையாட்டுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும்.

மேலும் அடிமட்ட முதல் தேசிய மட்டங்களில் அதன் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகவும் உள்ளது.

அதே வேளையில் வலுவான மாநில அணி தயார்படுத்தவும்,

2026 சுக்மாவில் கபடியை பிரகாசிக்கச் செய்யவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பீட்டர் கூறினார்.

முன்னதாக சுக்மாவில் கபடி இடம் பெறுவது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும்.

இயற்காக பாடுப்பட்ட அனைவருக்கும் நன்றி என்று சங்கத்தின் செயலாளர் ஏஎஸ்பி அருள் பிரகாஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset