நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கபடி உட்பட 34 விளையாட்டுப் போட்டிகளுடன் 2026 சிலாங்கூர் சுக்மா நடைபெறும்: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

கபடி உட்பட 34 விளையாட்டுப் போட்டிகளுடன் 2026 சிலாங்கூர் சுக்மா நடைபெறும்.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை உறுதிப்படுத்தினார்.

சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டியின்  உச்சக் குழு  கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அ டுத்த ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவுள்ள சுக்மா போட்டியை ஏற்பாடு செய்வது தொடர்பான பல முக்கிய முடிவுகளை இறுதி செய்யப்பட்டது.

இந்த முக்கிய முடிவுகளில் குத்துச்சண்டை,  சாப்ட்பால் ஆகிய இரண்டு கட்டாய விளையாட்டுகளைச் சேர்ப்பதும் அடங்கும்.

இதன் மூலம் இந்த முறை அனைத்து மாநிலங்களும் மொத்தம் 30 கட்டாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

மேலும் கூடுதலாக சுக்மா 2026இல் கபடி, சதுரங்கம், மின் விளைட்டு, கிரிக்கெட் ஆகிய நான்கு கூடுதல் விளையாட்டுகளும் அங்கீகரிக்கப்பட்டன.

இதனால் மொத்த விளையாட்டுகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்தது.

இந்த முடிவு இறுதியானது. மேலும் சேர்க்கைகளுக்கான எந்த மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படாது.

அடுத்தாண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில்  ஆகஸ்ட் 15 முதல் 26 வரை சுக்மா போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளுக்கு  முன்னதாக முழுமையான தயாரிப்புகளைச் செய்ய ஏற்பாட்டாளர்களுக்கு போதுமான நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதே வேளையில் சுக்மா 2026க்கான புரூணை குழுவின் அதிகாரப்பூர்வ பங்கேற்பையும் இன்றைய கூட்டம் அங்கீகரித்தது என்று ஹன்னா இயோ கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset