நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்தியர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு துணை நிற்கும்: அன்ட்ரூ டேவிட் 

கோலாலம்பூர்:

இந்தியர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு தொடர்ந்து  துணை நிற்கும்.

மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவின் தலைவர் அட்ன்ரூ டேவிட் இதனை கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காலபந்து போட்டி கடந்த மாதம் நடைபெற்றது.

ஆண்களுக்கான நமச்சிவாயம் கிண்ணம், பெண்களுக்கான ரவீந்திரன்  கிண்ணம் என இப்போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு 20 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கிவதாக ஒப்புக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்நிதிக்கான காசோலை பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசரும் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் தலைவருமான தெங்கு அமீர் ஷா முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதுவொரு பெருமையான தருணமாக அமைந்தது. இவ்வேளையில் சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி இந்தியர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு துணை நிற்கும்.

குறிப்பாக மஇகா, எம்ஐஇடியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் ஆலோசனையின் அடிப்படையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகுமாறன், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் டத்தோ டாக்டர் நகுலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset