
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து அணியின் வெற்றியைத் தட்டிப் பறித்த பந்துவீச்சாளர் சிராஜ்
லண்டன்:
ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய பவுலர் சிராஜ். இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். 1,113 பந்துகளை இந்தத் தொடரில் வீசியுள்ளார். அது அவரது அசாத்திய உடல் உழைப்புக்கும், கிரிக்கெட் மீதான ஆர்வத்துக்கும் சான்றாகும்.
கிரிக்கெட் உலகில் இப்போது சிராஜ் குறித்த டாக் வைரலாக உள்ளது. அதிலும் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் ஓவலில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ‘இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை’ என்ற நிலையிலும் அவர் மல்லுக்கட்டிய விதம் அற்புதம். அதுதான் பலரையும் ஈர்த்துள்ளது.
இந்தப் போட்டி முழுவதும் மாரத்தான் ஸ்பெல்களை சிராஜ் வீசி இருந்தார். அணியின் பவுலிங் யூனிட்டில் இடம்பெற்றுள்ள அனுபவ வீரர். தான் பந்து வீசுவதோடு நிற்காமல் மற்ற பவுலர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டிய நிலை அவருக்கு. இப்படி பல்வேறு டாஸ்குகளை சமாளித்து ஓவல் போட்டியில் இந்திய அணியை சிராஜ் வெற்றி பெற செய்துள்ளார்.
அதுவும் இங்கிலாந்தின் கைவசம் 4 விக்கெட்டுகளும் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற சுலப நிலையில், அது அவர்களுக்கு அவ்வளவு சுலபமல்ல என தனது பந்து வீச்சு மூலம் சிராஜ் நிரூபித்தார்.
கிடத்தட்ட ஆடுகளத்தை எதிரணி வீரர்களுக்கு படுகளமாக மாற்றி இருந்தார். அதுவும் 5-ம் நாள் ஆட்டத்தில் 25 பந்துகள் வீசி இங்கிலாந்தின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இங்கிலாந்து அணி இருந்தது. அந்தச் சூழலில் கடைசி விக்கெட்டான அட்கின்சனை போல்ட் செய்து இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தார்.
இங்கிலாந்து அணி உடனான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சிராஜ். கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து, தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2025, 8:21 am
போர்தோ அணியின் ஜாம்பவான் கோஸ்டா காலமானார்
August 6, 2025, 8:15 am
புதிய சீசனில் பெரிய விஷயங்கள் நடக்கும் எம்பாப்பே உறுதி
August 5, 2025, 11:11 pm
2026 சுக்மாவில் கபடியை பிரகாசிக்கச் செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: பீட்டர்
August 5, 2025, 11:07 pm
கபடி உட்பட 34 விளையாட்டுப் போட்டிகளுடன் 2026 சிலாங்கூர் சுக்மா நடைபெறும்: ஹன்னா இயோ
August 5, 2025, 8:34 am
கிளப் நட்புமுறை ஆட்டத்தில் பார்சிலோனா அபாரம்: ராஸ்போர்ட் முதல் கோலை அடித்தார்
August 5, 2025, 8:19 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் அணியினர் இரு ஆட்டங்களில் வெற்றி
August 4, 2025, 8:41 am
காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து மெஸ்ஸி வெளியேறினார்
August 4, 2025, 8:39 am