நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் 

சென்னை:

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல்கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் 100 இடங்களுக்கு விஜய் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து தீர்மானத்தை விஜய் வாசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளது. இன்னும் பாமக, தவெக மற்றும் தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் மட்டும் கூட்டணி நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளனர்.

இதில், முதல்முறையாக தேர்தல் களம் காணவிருக்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி இன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset