நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு தம்பதியரால் தத்தெடுக்கப்பட்ட சிறுவனுக்கு மலேசிய குடியுரிமை: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் பிறந்து பினாங்கைச் சேர்ந்த தம்பதியரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தை மலேசிய குடிமகனாகக் கருதப்பட வேண்டும் எனக் கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போது பதின்ம வயதை எட்டியுள்ள அந்த குழந்தைக்கு புதிய பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவில் பிறக்கும்போதே கைவிடப்பட்ட குழந்தை நாடற்ற பிரஜையாகிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இவ் வழக்குடன் தொடர்புடைய அக்குறிப்பிட்ட சிறுவன், இந்த அம்சங்களின் கீழ் வருவதாகவும், வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், அதை தெளிவுபடுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே, கூட்டரசு நீதிமன்றம் ஐந்து நீதிபதிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், தனது உத்தரவை வழங்குவதாக இந்த அமர்வுக்கு தலைமையேற்ற தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat குறிப்பிட்டார்.

முன்னதாக, தற்போது 17 வயதை அடைந்துள்ள அச்சிறுவனுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு நீதிமன்றமும் குடியுரிமை வழங்க மறுத்துவிட்டன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset