
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
சென்னை:
சன் 'டிவி' நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறனுக்கும் அவரது சகோதரரும் திமுக எம்பியுமான தயாநிதிமாறனுக்கும் இடையே பங்குகள் தொடர்பாக குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.
சன் குழுமத்தின் பங்கு நடைமுறையை, 2003ம் ஆண்டின் அசல் ஆவணத்தின்படி மீண்டும் மாற்ற வேண்டும் என கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, ஆறு பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என 'மனிகன்ட்ரோல் டாட் காம்' செய்தி இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துக்களை, தனிப்பட்ட ஆதாயத்துக்காக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள, மோசடி நடவடிக்கை மேற்கொண்டு, இதற்காக திட்டம் தீட்டி, ஏமாற்று வழிகளில் கலாநிதி சதி செய்து உள்ளார்.
சன் டிவியின் 60 சதவீத பங்குகள், நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களின் எந்தவித ஆலோசனை, ஒப்புதல் இன்றி கலாநிதி பெயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சன்டிவி பங்கு முதலீட்டில் குற்றச்செயல்களில் கிடைத்த தொகை வாயிலாக, சன் டைரக்ட், கல் ரேடியோஸ், கல் ஏர்வேஸ், கல் பப்ளிகேஷன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சவுத் ஏசியன் எப்.எம்., சன் பிக்சர்ஸ், தென்ஆப்ரிக்கா, பிரிட்டனில் கிரிக்கெட் அணிகள், ஸ்பைஸ்ஜெட் முதலீடு என ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்று தயாநிதிமாறன் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm