நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தி.மு.க. சர்க்கார், சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு

சென்னை:

இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்கார், இப்பொழுது சாரிம்மா மாடல் சர்காராக மாறி விட்டது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் த.வெ.க. தலைவர் விஜய்  இதனை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில், கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததற்கு நீதி கேட்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில், 24 பேர் உயிரிழந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், த.வெ.க., சார்பில், சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை, 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றார். 

சாரி வேண்டாம்; நீதி வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த பதாகைகளை விஜய் உட்பட த.வெ.க.,வினர் கையில் வைத்து இருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும், சாரி வேண்டாம்; நீதி வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

 முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசியதாவது:

திருப்புவனம் மடப்புரம் அஜித் குமார் சாதாரண, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். 

அந்த சாதாரண குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் சாரி சொன்னார்கள். அது தப்பில்லை. 

இப்பொழுது அதன் உடன் இதனையும் சேர்த்து முதல்வர்., சார் பண்ணிடுங்க. உங்களுடைய ஆட்சி காலத்தில், இதே மாதிரி போலீஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். 

அந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்கள் சாரி சொன்னீர்களா?

தயவு செய்து சாரி சொல்லிருங்க. அஜித்குமார் குடும்பத்திற்கு நீங்க கொடுத்த நிவாரணம் மாதிரி, இந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்க நிவாரணம் கொடுப்பீங்களா? தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்துடுங்க.

மேலும் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க., சர்கார், இப்பொழுது சாரிம்மா மாடல் சர்காராக மாறிருச்சு.

இந்த அரசு ஆட்சியை விட்டு போவதற்குள், நீங்கள் செய்த தப்பிற்கு எல்லாம் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset