
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு
சென்னை:
வரும் ஜுன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின், நிர்வாகக்குழு செயற்குழு கூட்டம் இன்று (மே 28) நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முஹம்மது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களாக 1. பி.வில்சன், 2.எஸ்.ஆர்.சிவலிங்கம், 3.ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm