
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மத மோதலை தூண்டும் பேச்சு: எச்.ராஜா மீது வழக்கு
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 17ம் தேதி வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரித்தும், பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான எச்.ராஜா, தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அவர்கள், தமிழகத்தில் மத மோதலை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக, முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராகுல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
மத மோதலை உண்டாக்கும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக 196 (1 பி), 197(சி), 353(1 பி) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கும் முன் ஹைகோர்ட் என் மயிருக்கு சமானம் என்று எச்.ராஜா சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm