நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா: திமுகவில் இணைந்தார்

சென்னை: 

முன்னாள் எம்.பியும், அதிமுக அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா அதிகமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடிப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து அவர் திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலினை சந்தித்து அக் கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் காலூன்ற முடியாது என்று அன்வர் ராஜா கூறியிருந்தது. இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியிருந்தார்.

இது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திமுகவில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திங்கள்கிழமை காலை அன்வர் ராஜா சென்றார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset