
செய்திகள் மலேசியா
மாலத்தீவு அதிபருக்கு அதிகாரப்பூர்வ அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது
புத்ராஜெயா:
மலேசியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள மாலத்தீவு குடியரசின் அதிபர் டாக்டர் முகமது முய்சுவுக்கு இன்று இங்குள்ள பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 9 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது வருகையை வரவேற்றார்.
அதன் பின்னர் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது.
ராயல் மலாய் ரெஜிமென்ட்டின் முதல் பட்டாலியனின் 102 உறுப்பினர்கள் மற்றும் மூன்று அதிகாரிகளைக் கொண்ட காவலர் மரியாதைக் குழுவை அதிபர் ஆய்வு செய்தார்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, அமைச்சரவை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இரு நாட்டுத் தலைவர்களும் மலேசியா, மாலத்தீவு இடையேயான இருதரப்பு உறவுகள், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
குறிப்பாக வர்த்தகம், முதலீட்டுத் துறைகள், ஹலால் தொழில், கல்வி, சுற்றுலா, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கி இவ்விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm