நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு தழுவிய இந்து ஆலயங்கள் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி முழுமையாக ஆதரிக்கப்படும்: கோபிந்த் சிங்

பட்டர் வொர்த்:

நாடு தழுவிய இந்து ஆலயங்கள் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி முழுமையாக ஆதரிக்கப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இந்து ஆலயங்கள் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து உதவுவதுடன் ஆதரவளிக்கும்.

இந்த வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கும், அதன் பக்தர்களுக்கு செயல்பாடுகளைப் பரப்புவதற்கும் இது உதவும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் சமூகத்தின் அடிமட்ட மக்களை சென்றடைவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும்

இதில் மதம், கலாச்சார, பாரம்பரியம் ஆகியவை அடங்கும்.

இதனால் டிஜிட்டல் நீரோட்டத்தில் யாரும் பின்தங்கியிருக்க மாட்டார்கள்.

நேற்று இரவு பட்டர்வொர்த்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மேலாண்மை அமைப்பு, இந்து அறப்பணி வாரியத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திறப்பு விழாவிற்குப் பிறகு கோபிந்த் சிங் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset