
செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து கட்சியின் உள் விவகாரச் செயற்குழு விசாரிக்கும்: ஜலிஹா முஸ்தாஃபா
கோலாலம்பூர்:
பிகேஆர் கட்சியின் தொகுதி தேர்தலில் முறைகேடுகள் நடந்தது குறித்துத் தாக்கல் செய்ய்யப்பட்ட மேல்முறையீடுகளைக் கட்சியின் உள் விவகாரச் செயற்குழு மதிப்பாய்வு செய்யும் என்று பிகேஆர் கட்சியின் தேர்தல் குழு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்ஃதபா தெரிவித்தார்.
அனைத்துப் புகார்களும் முதலில் டத்தோ அஹமத் காசிம் தலைமையிலான புகார் குழுவால் மதிப்பிடப்படும் .
அதுமட்டுமல்லாமல், மேல்முறையீடுகள் Mohd Khuzzan Abu Bakar தலைமையிலான மேல்முறையீட்டுக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தொகுதி நிலையிலான தேர்தலின் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், முடிவுகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் புகார்கள், மேல்முறையீடுகளை தெளிவான சான்றுகளைச் செயலாக்கக் கட்டணத்துடன் பிகேஆர் கட்சியின் தேர்தல் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
புகார் மற்றும் மேல்முறையீட்டு குழுக்களால் வழங்கப்படும் மதிப்பாய்வு அறிக்கையும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த இறுதி முடிவுக்காக பிகேஆர் கட்சியின் தேர்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்வ்
இதுவரை, ஏப்ரல் 11 முதல் நடைபெற்ற கட்சியின் தொகுதி நிலையிலான தேர்தலில் தோல்வியடைந்த நான்கு பிகேஆர் தலைவர்கள் குழு மூலம் மேல்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm