
செய்திகள் மலேசியா
துருக்கி நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
புத்ரா ஜெயா:
துருக்கி, இஸ்தான்புலில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம், விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.
மேலும், விஸ்மா புத்ரா தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இஸ்தான்புலில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியோடு அங்குள்ள அண்மையத் தகவல்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் விஸ்மா புத்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்தான்புலில் உள்ள மலேசியர்கள் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அங்குள்ள அதிகாரிகளின் வழிக்காட்டுதல்களைப் பின்பற்றவும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியது.
இஸ்தான்புல்லின் சிலிவ்ரி மாவட்டத்தின் மர்மாரா கடற்கரை பகுதியில் மலேசிய நேரப்படி மாலை 5.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm