நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா - சீனா இடையிலான விசா விலக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்: சைஃபுடின் 

மலேசியா - சீனா இடையிலான விசா விலக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்: சைஃபுடின் 

புத்ரா ஜெயா: 

மலேசியா-சீனா இடையிலான விசா விலக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

சீனச் சுற்றுப் பயணிகள் 90 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். 

அதேபோல், சீனா செல்லும் மலேசியர்களும்  90 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். 

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மலேசியாவும் சீனாவும் 31 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. 

இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளுக்குப் பரஸ்பர விசா விலக்கு அளிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டு இன்றுவரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக சைஃபுடின் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset