நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர்கள் முன்னிலையில் நர்சரி ஆசிரியர்களிடம் ஆயுதம் ஏந்திய 3 பேர் கொள்ளை

சபாக் பெர்ணம்:

மாணவர்கள் முன்னிலையில் நர்சரி ஆசிரியர்களிடம் ஆயுதம் ஏந்திய 3 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை 9.35 மணியளவில் சபாக் பெர்னாமின் பாசிர் பஞ்சாங்கில் உள்ள நர்சரியில் (குழந்தைகள் காப்பகம்) நிகழ்ந்தது.

இச் சம்பவத்தில் 10 நர்சரி மாணவர்கள் முன்னிலையில், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய மூன்று பேர் இரண்டு ஆசிரியர்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்தனர்.

மேலும் அவர்கள் ஆசிரியரின் இடது, வலது கன்னங்களிலும் அறைந்தனர். அதே வேளையில் சந்தேக நபர் ஒரு கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றனர்.

பெரோடுவா பெஸ்ஸாவில் மூன்று உள்ளூர் நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக ஒரு ஆசிரியரிடமிருந்து போலிசாருக்கு புகார் கிடைத்தது.

சந்தேக நபர்களில் ஒருவர் கத்தியுடன் ஆயுதம் ஏந்து பெண் ஆசிரியரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இவ்விவகாரம் குறித்து போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சபாக் பெர்னாம் போலிஸ் தலைவர் முகமட் யூசோப் அஹ்மது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset