நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“கோவில் ஹராம்” என்பது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது : டத்தோ சிவகுமார்

பெட்டாலிங் ஜெயா, 

“மார்க்கத்தைப் பிரதிபலிக்கும் ஆலயங்களை குறிவைத்து ‘ஹராம்’ எனும் சொல்லைப் பயன்படுத்துவது, நாட்டின் சகிப்புத்தன்மை - மத நல்லிணக்கத்துக்கு எதிரானது” என மகிமா (மலேசியா இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகளின் பேரவை) தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தினார்.

தற்போது ஆலயங்கள் தொடர்பாக அதிகமாகப் பயன்படுத்தப்படும் ‘ஹராம்’ என்ற சொல், அந்த ஆன்மீகத் தலத்தின் மதத்தன்மையை இழிவுபடுத்துவதோடு, அது தொடர்பான பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் அமைகின்றது என அவர் கவலை தெரிவித்தார்.

தைப்பிங் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதிவுசெய்யப்படாத ஒர் ஆலயம் குறித்து “கோவில் ஹராம்” என குறிப்பிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் சட்டரீதியில் முன்னெடுக்கப்ப்டுமென கூறியுள்ளது.

மாற்று சொல் இல்லையா?

“அந்த கோவில் உண்மையிலேயே அனுமதியில்லாமல் கட்டப்பட்டது உறுதிச்செய்யப்பட்டால், அதற்கேற்ப சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ‘ஹராம்’ எனப்படும் அவமதிப்புச் சொல்லைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிராகரிக்கின்றோம்,” என சிவக்குமார் கூறினார்.

இது போன்ற விவகாரங்கள் எழும் போது ‘அனுமதியில்லாத கோவில்’ எனலாம், ‘பதிவுசெய்யப்படாத கோவில்’ எனலாம். ஆனால் வெறுமனே ‘ஹராம்’ என்று கூறுவதால், அங்கு வரும் பக்தர்களை இழிவுப் படுத்தும் நடவடிக்கையாக இது அமைகின்றது.

இது மலேசியாவின் முதலாவது ரூக்குன் நெகாரா – “தெய்வ நம்பிக்கை” என்ற அடிப்படைக்கே முரணாகும் .ஒற்றுமையோடு பல மதங்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் பௌனம் காப்பது ஏன்?

இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சர், தொடர்பு பல்லூடக அமைச்சர்கள் எந்த கருத்தையும் முன்வைக்காததது மேலும் இந்திய சமுதாயத்தை காயப்படுத்தியுள்ளது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதுதான் அமைச்சர்களின் முதன்மை பணி. ஆனால் பல அமைச்சர்கள் இதை கண்டு கொள்வதே இல்லை என சிவகுமார் சாடினார்.

இவ்விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் மட்டும் பேசியவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மட்டும் தான் எனத் தெரிவித்த அவர், மற்ற தமிழ் பிரதிநிதிகள் எங்கே? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதம் அவசியம்

இனியும் இதுபோன்ற சொற்களை எவரும் பயன்படுத்தாத வண்ணம் இருப்பதை உறுதிச் செய்ய, பிரதமரின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்றும் சிவகுமார் வலியுறுத்தினார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset