நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்ட  சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு 

ஊட்டி: 

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாகவும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அவ்வப்போது ஊட்டியில் கோடை மழை பெய்வதால், வெயிலின் தாக்கம் குறைந்து ரம்மியமான தட்பவெப்ப நிலை நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஊட்டியின் ரம்மியமான சூழலை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல, நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் ஆகிய இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

அதிக வாகனங்கள் சென்று வந்ததால் தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல கூடிய சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், ஊட்டி-குன்னூர், ஊட்டி-கோத்தகிரி, ஊட்டி-கூடலூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset