நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் காஜா முயீனுத்தீன் வலியுறுத்தல்

தக்கலை:

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர் முஹம்மது அப்பா நினைவு மண்டபத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுக்குழு கூட்டம் சபையின் மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் 
நேற்று (28.01.2026) செவ்வாய்க்கிழமை 
நடைபெற்றது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகதமாக அதிகப்படுத்த வேண்டும். 

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பரப்பை செய்வோரை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்து தண்டிக்க ஏதுவாக சட்டங்களை இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset