செய்திகள் தமிழ் தொடர்புகள்
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
சென்னை:
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,
“புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவுகூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை. கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று வரும் 18.4.2025 புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
December 27, 2025, 8:31 am
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி உத்தரவு
December 26, 2025, 4:35 pm
அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: எடப்பாடி பழனிசாமி
December 24, 2025, 7:28 am
“விஜய் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை”: பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன்
December 23, 2025, 11:26 pm
