நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அரசாங்கத்தைக் குறைகூறும் போலித் தோற்றக் காணொலி பொய்யானது: முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) தம் உருவத்தை வைத்து அரசாங்கத்தைக் குறைகூறும் போலித் தோற்றக் காணொலியைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் தந்துள்ளார்.

அதைப் பற்றி அவர் இன்று முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

அந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ள குரல் அவருடைய குரல் போலவே இருப்பதாக அவர் சொன்னார்.

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் வாக்காளர்களைக் கவர மேற்கொள்ளப்படும் மோசடி முயற்சிகள் அச்சத்தைத் தருவதாய்க் கூறினார்.

தேர்தலில் எவருக்கு ஆதரவாக இருந்தாலும் அனைவரும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று  ஹலிமா கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர்களின் திறமை, கொள்கைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பதற்குப் பதிலாக இவ்வாறு நேர்மையற்ற முறையைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset