
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குருமூர்த்தியுடன் தீவிர ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் மத்திய பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்த அவரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவுக்கான மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரையில், பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்வு குறித்து விவாதித்தார் என்று கூறப்படுகிறது.. அதைத் தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா அவருடன் ஆலோசனை நடத்திவிட்டு சற்று முன் அங்கிருந்து வெளியேறினார். ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் அவர் குருமூர்த்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm